கூகுள் Chrome பயனர்கள் கவனத்திற்கு

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் கூகுள் குரோம் உலாவி 98.0.4758.80.க்கு முந்தைய பதிப்பைப் பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதனை புதுப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அரசு எச்சரிக்கை:

உலகம் முழுவதும் கணினி, ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் பிரவுஸர் பயன்பாட்டில் கூகுள் குரோம்,மொசில்லா ஃபயர்பாக்ஸ், ஓபிரா போன்ற பிரவுஸர்கள் உள்ளன. இருப்பினும் இதில் முதலிடம் பிடிப்பது கூகுள் குரோம் (Google Chrome) தான். நூற்றுக்கு 90% சதவீத பேர் கூகுள் குரோம் பயன்படுத்திகிறார்கள். தற்போது கூகுள் குரோம் உலாவி 98.0.4758.80.க்கு முந்தைய பதிப்பைப் பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதனை புதுப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் கூகுள் குரோம் பயனர்களுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது கணினியில் பழைய கூகுள் குரோமில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக சைபர் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஹேக்கர்கள் கூகுள் குரோம் வழியாக கணினிக்குள் நுழைகின்றனர். மேலும் தகவல்களையும் திருடிகின்றனர். நாம் தினமும் கணினியில் என்ன செய்கிறோம் என்பதைக் கண்காணிக்க மால்வேர் எனப்படும் ஆபத்தான மென்பொருளையும் நிறுவுகிறார்கள். இப்படி நாம் உபயோகிக்கும் கணினி விவரங்களைத் திருடிய பிறகு, அவர்கள் அதனை வெளியிடுவேன் என்று மிரட்டி பணம் கேட்கவும் வாய்ப்புள்ளது.

எனவே கூகுள் குரோம் பயனர்கள் அதன் பழைய பதிப்பைப் அன் இன்ஸ்டால் செய்து விட்டு . விண்டோஸ் இயங்குதளத்திற்காக Chrome 98.0.4758.80/81/82 பதிப்பு, Mac, linux ஆகிய இயங்குதளங்களுக்காக 98.0.4758.80 என்று புதிதாக வெளியிடப்பட்ட உலாவியை ஏற்றும் படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது . மேலும் புதிய கூகுள் குரோமில் பல திருத்தங்களும், மேம்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூகுள் தெரிவித்துள்ளது. இது அப்டேட் செய்யும் பயனர்களுக்கு கிடைக்கும் என்று நிறுவனம் உறுதிபடுத்தி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post