தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை எழுச்சி காரணத்தால், மாணவர்களின் பாதுகாப்பு அடிப்படையில் ஜனவரி 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இந்த விடுமுறை குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து விட்டதாகவும் அதனால் ஊடங்குகளில் தளர்வு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து கல்வி நிறுவனங்களும் பிப் 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. எனவே இந்த தேர்தலுக்காகத்தான் கொரோனா குறைந்து விட்டதாகவும், அதனால் தான் தமிழக அரசு அமலில் இருந்து ஊரடங்கில் தளர்வு அளித்துள்ளதாகவும் பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் இந்த தேர்தல் வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து தேர்தல் பணிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 22ம் தேதி வரை இந்த விடுமுறையை நீட்டிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் 23ம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment