முழு நேரமும் பள்ளிகள் செயல்பட வேண்டும்: கல்வித்துறை உத்தரவு.


 

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் காலை, பிற்பகல் என முழு நேரமும் செயல்பட வேண்டும். அனைத்துப் பாடவேளைகளிலும் பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பள்ளிகள் காலை, பிற்பகல் என இரு வேளைகளிலும் செயல்பட வேண்டும். வழக்கத்தில் உள்ள அனைத்துப் பாட வேளைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவா்களை முழு அளவில் நேரடியாகப் பள்ளிக்கு வரவைத்து பாடம் நடத்த வேண்டும்.


அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவா்களை வீட்டுக்கு அனுப்புவதும் நடக்கக் கூடாது; நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பாடங்களையும் மிகுந்த கவனத்துடன் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post