PGTRB - முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு 12ம் தேதி துவக்கம்.
அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். வரும், 12ம் தேதி முதல் 180 மையங்களில் கணினி வழியில் தேர்வு நடத்தப்படுகிறது.
மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பதவிகளில் காலியாக உள்ள, 2,207 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., போட்டி தேர்வை நடத்துகிறது. வரும், 12ம் தேதி முதல் 20 வரை, பாட வாரியாக, 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுதும், 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க, 200 மேற்பார்வை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, நேரலை காட்சி பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு குறித்த விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Post a Comment