பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.09.2022


  திருக்குறள் :

பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள் : 4

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல


பொருள்:

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை


பழமொழி :

The only jewel which will not decay is knowledge

அறிவு மட்டுமே அழியா அணிகலம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது. 

2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது . 

பொன்மொழி :

வாழ்க்கை என்பது ஊஞ்சலில் உட்கார்ந்து ஊசலாடுவது அல்ல; புயலுக்கு நடுவே படகைச் செலுத்துவது போன்றது.

பொது அறிவு :

1.மையோப்பியா என்ற நோய் மனிதனின் எந்த உடல் உறுப்பை தாக்குகிறது? 

கண்கள். 

 2 . கடல் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன? 

 அண்டார்டிகா.

English words & meanings :

vi-vi-pa-ro-us - giving birth to young ones from the body. Adjective. Most of the mammals are viviparous. குட்டி ஈனுகின்ற. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு :

கொண்டைக்கடலையில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இதை எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வறுப்பதன் மூலம் எந்தவித ஊட்டச்சத்தும் குறையாது.


நம்முடைய உடலில் ஏற்படும் செல்களின் சேதத்தைத் தடுக்கவும் புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் புரதச்சத்து மிக அவசியம். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் இந்த வகை புரதங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.


NMMS Q 68:p

பிரம்மாண்டமான பேராளி என்று அழைக்கப்படுவது _____. 


 விடை: பான்தலாசா


செப்டம்பர் 27


உலக சுற்றுலா நாள்


உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

மூன்று வரங்கள்

ஏழை ஒருவன் ஒரு தேவதைக்குத் திருப்தி ஏற்படும்படி நடந்து கொண்டான். அந்தத் தேவதை அவன் முன்னர்த் தோன்றி, மூன்று சொக்கட்டான் காய்களைக் கொடுத்து, அவற்றை உருட்டி மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது. 


மகிழ்ச்சி அடைந்த அந்த மனிதன் வீடு திரும்பி, தன் மனைவியிடம் விவரத்தைச் சொன்னான். பண ஆசை பிடித்த அவளோ பணத்திற்காகக் காயை உருட்டும்படிச் சொன்னாள். அதற்கு அவன், நம் இருவருக்கும் மூக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது. ஊரார் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். முதலில் அழகான மூக்கு வேண்டும் என்று காயை உருட்டுவோம் என்றான். 


ஆனால் பணத்தை விரும்பிய மனைவியோ காயை உருட்ட விடாமல் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். கணவனோ திமிறிக் கையை விடுவித்துக் கொண்டு எங்கள் இருவருக்கும் அழகான மூக்குகள் அமையட்டும் மூக்குகளைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம் என்று காயை உருட்டிவிட்டான்.


உடனே அவர்கள் இருவர் உடம்பிலும், அழகிய ஆனால் பல மூக்குகள் தோன்றிவிட்டன. பல மூக்குகள் இருப்பது அவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் மூக்குகளே வேண்டாம் என்று காயை உருட்ட அவர்கள் இருவரும் சம்மதித்தார்கள். அதன்படி உருட்டியப் போது மூக்குகளே இல்லாமல் போய்விட்டன. இப்படி இரண்டு வரங்கள் வீணாகிவிட்டன. 


என்ன செய்வது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேட்பதற்கு இனி ஒரே ஒரு வரம் தான் மீதி இருந்தது. மூக்குகள் இல்லாத காரணத்தால் அதிக விகாரமாக இருந்தது. இந்த நிலையில் வெளியில் போக அவர்கள் மிகவும் நாணினார்கள். அழகிய மூக்குடன் எப்படி வந்தது என்று ஊரார் கேட்பார்களே, அதற்கு என்ன பதில் சொல்வது என்று அஞ்சினார்கள். தங்கள் மடமையை நினைத்து வருத்தப்பட்டார்கள். அதனால் அழகற்ற பழைய மூக்கு தங்களுக்கு வந்தால் போதும் என்று காயை உருட்டினார்கள். ஆசைப்படாதே ஆசைப்படுவது உனக்கு கிட்டும். அதோடு கூட, பந்தமும் வரும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.


இன்றைய செய்திகள்

27.09.22

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமென அனைத்து பஞ்சாய்த்துகளுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மரங்கள் அகற்றியது தொடர்பாக மாதந்தோறும் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


* "செம்மைப்படுத்தப்பட்ட" ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்.


* சென்னை மெரினா கடற்கரையில் இலவச வைஃபை சேவையை சென்னை மாநகராட்சி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.


* சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை இன்று தமிழில் வெளியாகும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தினமும் 10 லட்சம் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


* நாம் வாழும் பூமியில் மொத்தம் 20 குவாட்ரில்லியன் எறும்புகள் (20,000,000,000,000,000) இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


* ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா, பிரேசில் நாடுகள் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்பதாக ரஷ்யா தெரிவித்ததுள்ளது.


* ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி -  நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.


* கொரியா ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா 'சாம்பியன்' பட்டத்தைக் கைபற்றினார்.


* பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை லிடிமிலா சாம்சோனோவா ‘சாம்பியன்’ பட்டத்தைக் கைப்பற்றினார்.

Today's Headlines


* The Madras High Court has ordered the District Collectors to issue instructions to all the panchayats to remove the  seema karuvelam trees, and has also ordered them to submit a monthly report on the removal of the trees.


* "Refined" Online Rummy Ban Act: Tamil Nadu Cabinet approves


 * Chennai Corporation will soon introduce free Wi-Fi service at Chennai Marina Beach.


 * The Chennai Municipal Corporation has informed that the Chennai Climate Change Action Plan report will be released in Tamil today.


* 23 districts in Tamil Nadu are likely to receive heavy rain for 3 days, according to the Chennai Meteorological Department.


 * According to Union Health Minister Mansukh Mandaviya, a target has been set to issue 10 lakh cards daily under the Ayushman Bharat Health Insurance Scheme.


 * A new study has reported that there are a total of 20 quadrillion ants (20,000,000,000,000,000) on Earth.


 * Russia has expressed its support for the permanent membership of India and Brazil in the United Nations Security Council.


* Julius Cup Chess Tournament - Norway's Karlsson wins the title.


* Korea Open Tennis: Russian Alexandrova wins 'Champion' title.


* Russian player Lidymila Samsonova won the Pan Pacific Open Women's International Tennis Championship title.

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

Post a Comment

Previous Post Next Post