திருக்குறள் :




பால்:பொருட்பால்







இயல்: நட்பியல்







அதிகாரம்:பகைமாட்சி







குறள் : 863







அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு.







பொருள்:

அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்







பழமொழி :




All are not hunters that blow the horn.







துப்பாக்கி எடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள் அல்ல.




இரண்டொழுக்க பண்புகள் :




1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.




2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.




பொன்மொழி :




துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும். ___கலாம்




பொது அறிவு :




1. உலோகங்களின் இராஜா என்றழைக்கப்படும் உலோகம் எது?




இரும்பு.




2. எந்த ஒரு அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது?




பிளாட்டினம்.




English words & meanings :




Aural - of hearing, செவி வழி கேட்டல்,







oral - of mouth, வாய் வழி




ஆரோக்ய வாழ்வு :




நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும்.




கணினி யுகம் :




Ctrl + <--- - Move one word to the left.







Ctrl + ----> - Move one word to right







மார்ச் 31







"ஜெசி" ஓவென்ஸ்




ஜேம்ஸ் கிளீவ்லன்ட் "ஜெசி" ஓவென்ஸ் (James Cleveland "Jesse" Owens, செப்டம்பர் 12, 1913-மார்ச் 31, 1980) ஓர் அமெரிக்க தடகள ஆட்டக்காரர் ஆவார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில், ஹிட்லர் உயர்த்திப் பிடித்த 'ஆர்ய மேன்மை’ சித்தாந்தத்தை உடைத்தெறிந்ததில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் பங்கு முக்கியமானது. அந்த ஒலிம்பிக்கில் 100 மீ, 200 மீ, 4*100 தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் தங்கம் வென்று, ஹிட்லரை திகைக்க வைத்தார். ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியது.







ஹிட்லரின் சித்தாத்தம் ஒன்றை மூக்குடையச் செய்து தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை உலகுக்கு நிரூபித்துக் காட்டிய ஒரு அதிசய விளையாட்டு வீரரைப் பற்றித் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் ஜெசி ஓவன்ஸ்.




நீதிக்கதை




சிங்கத்தின் வீரம்







ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது.







இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது.







ஏய்.... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும். சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன.







இதைப் பார்த்துக் கத்தியது ஈ அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன். பிறகு ஈ பறந்து சென்றது. இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம். தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான்.

Post a Comment

أحدث أقدم