முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.,க்களுக்கு, சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுதன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படும், அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், வரும் 2022- - 23ம் கல்வி ஆண்டில், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. மொத்தம் 165 பள்ளிகளுக்கு தரம் உயர்த்தும் கோரிக்கைகள் வந்துஉள்ளன. இந்த பள்ளிகளை முழுமையாக ஆய்வு செய்து, அவை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையுள்ளதா என்ற விபரங்களை அறிக்கையாக சி.இ.ஓ.,க்கள் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
إرسال تعليق