TNTET தேர்வுக்கான தமிழ் முக்கியக் குறிப்புகள் (6 மற்றும் 7-ஆம் வகுப்பு) கவிஞர்கள், சிறப்புப் பெயர்கள் மற்றும் நூல்கள்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்:
சிறப்புப் பெயர்: மக்கள் கவிஞர்.
சிறப்பு: எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியவர்.
நாமக்கல் கவிஞர் (வே. இராமலிங்கம் பிள்ளை):
சிறப்புப் பெயர்: காந்தியக் கவிஞர்.
வாணிதாசன்:
சிறப்புப் பெயர்: தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்.
தாராபாரதி:
இயற்பெயர்: இராதாகிருஷ்ணன்.
சிறப்புப் பெயர்: கவிஞாயிறு.
முக்கிய வரி: "தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசமுடுத்திய நூலாடை".
முடியரசன்:
நூல்கள்: பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம். (குறிப்பு: 'மலையருவி' என்பது கி.வா. ஜகந்நாதன் தொகுத்த நாட்டுப்புறப் பாடல் நூல்; முடியரசன் எழுதியதல்ல).
கவிமணி தேசிக விநாயகனார்:
36 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆசிய ஜோதி: புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல். இது ஆங்கிலத்தில் எட்வின் அர்னால்டு எழுதிய 'லைட் ஆஃப் ஆசியா' (Light of Asia) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்:
நூல்: கனிச்சாறு.
நடத்திய இதழ்கள்: தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.
பாரதியார்:
முக்கிய வரிகள்: "தமிழ்போல் இனிதாவது எங்கும் காணோம்", "காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்".
சுரதா (சுப்புரத்தினதாசன்):
சிறப்புப் பெயர்: உவமைக் கவிஞர் (பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் தன் பெயரை மாற்றிக்கொண்டார்).
நூல்கள்: துறைமுகம், தேன்மழை, அமுதும் தேனும்.
ரா.பி. சேதுப்பிள்ளை:
சிறப்புப் பெயர்: சொல்லின் செல்வர் (குறிப்பு: இராமாயணத்தில் அனுமன் 'சொல்லின் செல்வன்' என அழைக்கப்படுகிறார்).
சிறப்பு: சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் தமிழ் நூல் இவரது 'தமிழின்பம்' ஆகும்.
இராமகிருஷ்ணன்: 'பாதம்' என்ற சிறுகதையின் ஆசிரியர்.
தாயுமானவர்: இவரது பாடல்கள் 'தமிழ் மொழியின் உபநிடதம்' எனப் போற்றப்படுகின்றன.
கடியலூர் உருத்திரங்கண்ணனார்: பட்டினப்பாலை மற்றும் பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களை இயற்றியவர்.
---
2. இலக்கிய வரிகளும் நூல்களும்
அகநானூறு:
"பொன்னோடு வந்து கறியோடு பெயரும்" (வணிகம் தொடர்பான வரி).
"உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்" (கப்பல் தொடர்பான வரி).
பட்டினப்பாலை: வணிகர்களை "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" எனப் பாராட்டும் நூல்.
புறநானூறு:
"தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே"
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, நாகரிகம், பண்பாடு, வீரம் மற்றும் போர்க்களச் சிறப்புகளை வெளிப்படுத்தும் நூல்.
நற்றிணை: "சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி" இடம்பெற்றுள்ள நூல்.
பதிற்றுப்பத்து: வெள்ளம் தொடர்பான செய்திகள் இடம்பெறும் நூல்.
தொல்காப்பியம்: "தமிழன் கிளவியும் அதனோரற்றே" ('தமிழ்' என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கண நூல்).
தேவாரம் (அப்பர்): "தமிழன் கண்டாய்" என்ற வரி இடம்பெற்றுள்ளது.
சிலப்பதிகாரம்:
தமிழின் முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
மணிமேகலை: மணிமேகலை கையிலிருந்த அமுதசுரபியில் முதலில் உணவிட்ட பெண் ஆதிரை.
நாலடியார்: 'வேளாண் வேதம்' மற்றும் 'குட்டித் தொல்காப்பியம்' என அழைக்கப்படுகிறது.
இன்பத்தமிழ் (பாரதிதாசன்):
இளமைக்குப் பால், புலவர்க்கு வேல், அறிவுக்குத் தோள், சமூகத்தின் விளைவுக்கு நீர்.
பழமொழி: "அடைமழை விட்டாலும் செடிமழை விடாது".
---
3. திருக்குறள் மற்றும் அறிஞர் கூற்றுகள்
உள்ளத்தின் உயர்வு: "வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு" (நீரின் அளவிற்கு ஏற்ப தாமரை உயரும்; அதுபோல உள்ளத்தின் உயர்விற்கு ஏற்ப மனிதன் உயர்வான்).
நிலையான செல்வம்: ஊக்கம் (முயற்சி).
தீமை உண்டாகும் வழி: செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால் தீமை உண்டாகும்.
அறங்களுள் சிறந்தது: பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் (காகத்தின் பண்பு).
எடுத்துக்காட்டு உவமையணி: "தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" (இதில் 'போல' என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது).
காந்தியடிகள் கூற்று: "இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது" என்று உ.வே.சாமிநாதர் அவர்களைப் பற்றிக் கூறினார்.
இராஜாஜி கூற்று: "முத்துராமலிங்கரின் பேச்சு உள்ளத்திலிருந்து வெளிவருகிறது, உதடுகளிலிருந்து அல்ல" என்று பாராட்டினார்.
கி.ஆ.பெ. விசுவநாதம் கூற்று: "திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தாருக்குத் தெரிந்திருக்காது".
---
4. இலக்கணம் மற்றும் மொழித்திறன்
வினா எழுத்துக்கள்: மொழியின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து 'ஏ' (எ.கா: ஏன்?, நீதானே?).
ஓர் / ஒரு பயன்பாடு:
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'ஓர்' வரவேண்டும் (எ.கா: ஓர் அழகிய).
மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'ஒரு' வரவேண்டும் (எ.கா: ஒரு குளம்).
அஃது / அது பயன்பாடு:
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'அஃது' வரவேண்டும் (எ.கா: அஃது இங்கே உள்ளது).
மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் 'அது' வரவேண்டும்.
பிரித்து எழுதுக: பொற்கோட்டு = பொன் + கோட்டு.
சார்பெழுத்துக்கள் (10 வகை): உயிர்மெய், ஆயுதம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆயுதக்குறுக்கம்.
ஐகாரக் குறுக்கம்:
தனித்து வரும்போது 2 மாத்திரை.
சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை.
சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது 1 மாத்திரை.
காரணச் சிறப்புப் பெயர்: வட்டமாக (வளைந்து) இருப்பதால் வளையல் என அழைக்கப்படுவது காரணச் சிறப்புப் பெயராகும்.
தொழிற்பெயர்: விகுதி பெற்ற தொழிற்பெயர் - நட்பு (நள் + பு).
எதுகை & மோனை:
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை (எ.கா: இரவு - இறகு).
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை (எ.கா: உலகு - புலவு).
திரிசொல்: கற்றோருக்கு மட்டுமே விளங்குவதாகவும், இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருவதாகவும் அமையும் சொற்கள்.
மரூஉ (ஊர்ப் பெயர்கள்):
தஞ்சாவூர் - தஞ்சை
கோயம்புத்தூர் - கோவை
திருநெல்வேலி - நெல்லை
மொழியின் உயிர்நாடி: பேச்சு மொழி.
---
5. சொற்பொருள் மற்றும் கலைச்சொற்கள்
சொற்பொருள்
சொல் பொருள்
மேதினி / தாரணி உலகம்
திகிரி ஆணைச்சக்கரம்
நெகிழி தீச்சுடர்
மதலை தூண்
வெற்பு மலை
கழனி வயல்
சாஸ்தி மிகுதி
வாரணம் யானை
கமுகு பாக்கு
விஸ்தாரம் பெரும்பரப்பு
கலைச்சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)
Debit Card – பற்று அட்டை
Credit Card – கடன் அட்டை
Demand Draft (DD) – வரைவோலை
Cheque – காசோலை
Internet – இணையம்
Touch Screen – தொடுதிரை
Voice Search – குரல் தேடல்
Search Engine – தேடுபொறி
---
6. பொது அறிவு மற்றும் பண்பாட்டுத் தகவல்கள்
காமராஜர் பிறந்தநாள் (ஜூலை 15): கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
நெய்தல் திணை: கடலும் கடல் சார்ந்த இடமும். இத்திணைக்குரிய பூ தாழம்பூ.
பூவின் ஏழு நிலைகள் (வரிசையாக): 1. அரும்பு, 2. மொட்டு, 3. முகை, 4. மலர், 5. அலர் (ஐந்தாவது நிலை), 6. வீ, 7. செம்மல்.
வேலுநாச்சியார்: ஆங்கிலேயரிடமிருந்து சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780 (8 ஆண்டுகள் திண்டுக்கல் விருப்பாட்சியில் கோபால நாயக்கர் பாதுகாப்பில் இருந்தார்).
செங்கால் நாரைகள்: ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வலசைப் பறவைகள். 1400 ஆண்டுகளுக்கு முன்பே சத்திமுத்தப்புலவர் தமது பாடலில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் ஓட்டுபவரைக் குறிக்கும் பெயர்கள்: மாலுமி, நீகான், கம்மியர், மீகாமன். (சுக்கான் என்பது கப்பலைத் திருப்ப உதவும் உறுப்பு).
களம்காரி ஓவியம்: துணியில் வரையப்படும் ஓவியம்.
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்: சுரம், முதை, வியல்.
காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு: புலி.
பாஞ்சாலங்குறிச்சி நாட்டுப்புறப் பாடல்: வீரபாண்டிய கட்டபொம்மனின் நாட்டில் முயல் நாயை விரட்டும்; பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்: விவசாயிகளின் துயர் துடைக்க 'ஜமீன் விவசாயிகள் சங்கம்' ஏற்படுத்தினார்.
إرسال تعليق