வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக பல அட்டகாசமான அம்சங்களை வெளியிட்ட டெலிகிராம்: முழு விவரம்.!

டெலிகிராம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக டெலிகிராம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் டெலிகிராம் செயலியில் பயனுள்ள பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிகிராம் செயலி ஆனது தனித்துவமான டிராஸ்பெரண்ட் டிசைனை வழங்கியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் அறிமுகம் செய்துள்ள டவுன்லோட் மேனேஜர் அம்சத்தின் மூலம் நாம் ஒரே நேரத்தில் எத்தனை ஃபைல்களை டவுன்லோட் செய்கிறோம் என்பதை காண முடியும். அதே சமயம் எந்த ஃபைலை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதையும் இதன் மூலம் தேர்வு செய்ய முடியும். குறிப்பாக டெலிகிராம் முன்பு 2ஜிபி வரையிலான ஃபைல்ஸை ஷேர் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் அப்டேட்: அட்டாச்மெண்ட் மெனு

டெலிகிராம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அட்டாச்மெண்ட் மெனு அம்சத்தின் மூலம் நாம் பல ஃபைல்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்து ஷேர் செய்ய முடியும். பின்பு இந்த அட்டாச்மெண்ட மெனு உதவியுடன் நாம் எந்தெந்த ஃபைல்களை சமீபத்தில் அனிப்பியிருக்கிறோம் என்பதைகண்காணிக்கவும், அனுப்பிய ஃபைல்களை தேடி எடுக்க முடியும்.

டெலிகிராம் அப்டேட்: லைவ் ஸ்ட்ரீம்

 ஓபிஎஸ் ஸ்டூடியோ, எக்ஸ்ஸ்பிளிட் பிராட்கேஸ்டர் போன்ற ஸ்ட்ரீமிங் டூல்களை பயன்படுத்தியும் டெலிகிராம் செயலியில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும். அதேபோல் ஓவர்லே, மல்டி ஸ்க்ரீன் லே அவுட்ஸ் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டெலிகிராம் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Post a Comment

Previous Post Next Post