எதிர்வரும் 20-03-22 அன்று நடைபெறும்

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்,


1. பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர்கள் மற்றும்

உறுப்பினர்களை

தேர்வு

செய்வதற்கான

கூட்டம் அல்ல

என்பதை நினைவிலிருத்திக்

கொள்ள வேண்டும்!


2. smc பொறுப்பாளர்கள்-உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான கூட்டநாள்

ஏப்ரல் முதல் வாரத்தில்

அறிவிக்கப்படும் என்று

தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. 20 ஆம் தேதி கூட்டத்தில்

பள்ளி மேலாண்மைக் குழு வலுப்படுத்தி மேம்படுத்துதல் குறித்து விரிவான

கலந்துரையாடல் நடைபெற வேண்டும்.


4.  smc பொறுப்புப்பாளர்கள்- உறுப்பினர்கள்

தேர்வு குறித்து

வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை 20 ஆம் தேதி கூட்டத்தில்  தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்!


 5. மாதம் ஒரு முறை smc கூடி

பள்ளி வளர்ச்சி 

கல்வித் தரம் மற்றும் குறித்து

விவாதிப்பது

கட்டாயம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.


6. பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

தயாரிப்பது குறித்தும்


அதில் இடம்பெற வேண்டிய

அனைத்து

அம்சங்களையும் 

இக் கூட்டத்தில்

கட்டாயம் இறுதி செய்ய வேண்டும்.


7. இல்லம் தேடிக் கல்வி‌

தன்னார்வலர்களுக்கு கற்பத்தலில்

ஏதேனும் சிற்சில இடையூறுகள்

இருக்கலாம்! அவைகளுக்கான தீர்வுகளை நோக்கி விவாதிக்க வேண்டும்!


8. கல்வித் துறை தவிர்த்து பிற துறையின் மூலம் பள்ளியின் வளர்ச்சிக்கு என்னன்ன

உதவிகள் பெற முடியும் என்பதை விவாதிக்க வேண்டும்!

 

9. தற்போது நடைபெறும்

smc வலுப்படுத்தி மேம்படுத்துதல்

கூட்டத்தின் பயனாக பள்ளி

வளர்ச்சிக்கு

தேவையான

விஷயங்கள்

குறித்து விரிவாக விவாதித்தல்

வேண்டும்!


(உதாரணமாக

smart class

இலக்கிய மன்ற போட்டிகள்

கலாச்சார நிகழ்வுகள்

கராத்தே பயிற்சி......

இப்படித் திட்டமிடல்)


10. smc வரவு செலவு கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும்!


11. பள்ளி சுகாதாரம்

குடிநீர் வசதி

போன்ற அடிப்படை வசதி களை

மேம்படுத்துவதில்

உள்ள பிரச்சனைகள் குறித்து

விவாதிக்கலாம்!


12..  மொத்தத்தில்

பள்ளி வளர்ச்சி,


மாணவர்களின்

கல்வி மேம்பாடு


அவைகளுக்கு

இடையூறான

சூழல்கள் குறித்து

விவாதிக்க வேண்டும்!


13.  இனி 

பள்ளி

பெற்றோர் சமூகம் ஆசிரியர்

மாணவர்

என்ற கூட்டமைப்பு

இணைந்து

செயல்படும்

புதிய பயணத்தை

தொடங்க வைப்பதே

அரசின் நோக்கம்! இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம் அதுவே!


14. smc  பொறுப்பாளர்ள் தேர்வு நாள் குறித்து

அறிவிப்பு வரும்! என்பதை தலைமையாசிரியர்கள் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்!


20 ஆம் தேதி நிகழ்வுகளின் 

புகைப்படங்கள் ,

அன்றைய தீர்மானங்கள்,


வருகைப் பதிவு   

EMiS இல் பதிவேற்றம் செய்யும் வகையில்

தயார் செய்து கொள்வது கட்டாயமாகும்!


நன்றி.

Post a Comment

Previous Post Next Post