திருக்குறள் :

குறள் எண் : 847

குறள்:
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

பொருள்:
நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்

பழமொழி :

A good face needs no paints

அழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும் எனவே ஊக்கமுடன் எனது வேலைகளைச் செய்வேன் 

2. முயன்றால் பட்டாம் பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்

பொன்மொழி :

நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலை வராது.. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது.. நீ துணிவுள்ளவனாக  இருந்தால் அச்சம் வராது.

பொது அறிவு :

1.ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகளை குறிக்கிறது? 

33 ஆண்டுகள். 

2. இந்தியாவில் மூன்று கடல்கள் சந்திக்கும் இடம் எது? 

கன்னியாகுமரி.

English words & meanings :

Summit - the highest point of a hill or a mountain, மலை அ‌ல்லது குன்றின் உச்சி. 

Reinforce - strengthen, சொல்ல பட்ட காரியத்தை இன்னும் உறுதி படுத்தல்

ஆரோக்ய வாழ்வு :

நூக்கல் வைட்டமின்களும், புரத சத்துக்களும் நிறைந்துள்ளது. விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மை கொண்டது. ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். நூக்கல் தொடர்ந்து சாப்பிடுவதால் குடல் நாளங்கள் உறுதிப்படும், மேலும் எலும்புகளும் உறுதிப்படும். நரம்புத்தளர்ச்சி ஏற்படாமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

கணினி யுகம் :

F4 - Open the drive selection when browsing. 

F5 - Refresh contents

மார்ச் 22


உலக நீர் நாள் (World Water Day),
உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.


நீதிக்கதை


நல்ல நண்பன் வேண்டும்

ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.

அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

22.03.22

★தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

★சிவில் சர்வீசஸ் ஆளுமைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி: தலைமைச் செயலர் இறையன்பு அறிவிப்பு.

★ தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் விதிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலர்  தெரிவித்துள்ளார்.

★பருவத்தேர்வில் மாணவர்கள் தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்களும் நிச்சயம் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

★வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூடுதல் இயக்குநர் சமிரான் பாண்டே தெரிவித்துள்ளார்.

★இரண்டாவது தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதுஎன நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

★கோழி இறைச்சி ரூ.1,000, டீ ரூ.100, முட்டை ரூ.36, உளுந்த வடை ரூ.80: மீண்டும் உயர்ந்த கேஸ் விலையால் தவிக்கும் இலங்கை மக்கள்.

★உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுக்க, அந்நாட்டில் இருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் விடுபட்ட கல்வியைத் தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

★இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: போராடி டிரா செய்த வெஸ்ட் இண்டீஸ்.

★ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: பெண்கள் ஒற்றையர் இறுதிபோட்டியில் ஜப்பானைச் சேர்ந்த அகானே யமாகுச்சி சாம்பியன்.

★மாநில அளவிலான சிலம்ப போட்டியில் திருச்சி சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைக்கூடத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் முதலிடம் பிடித்தனர்
 ★ The Tamil Nadu government has told the Chennai High Court that it has decided to seal the shops that do not stop using banned plastic products.

 ★ Free Training for Civil Services Personality Examination: Announcement by the Chief Secretary Thiru. Iraiyanpu 

 ★ As there is a possibility of  increase in corona infection in Tamil Nadu, the public should follow the rules, said the Health Secretary.

 ★ Higher Education Minister Ponmudi has said that the answer sheets submitted by the students later in the semester will also be evaluated and the results will be announced definitely.

 ★ Samiran Pandey, Additional Director, Medical Research Council of India (ICMR), said there was no need to worry about the increasing spread of corona abroad.

 ★ The National Technical Advisory Committee on Immunization (NDAGI) has announced that the interval for the second installment of the Govshield vaccine has been reduced.  This change is expected to take effect soon.

 ★ Chicken meat Rs.1,000, tea Rs.100, eggs Rs.36, lentils Rs.80: Sri Lankans again suffering from high gas prices.

 ★ Students returning from Ukraine have been given the opportunity to pursue missed education following an attempt from that country to take classes online.

 ★ Test against England: West Indies struggled and drew.

 ★ All England Badminton: Akane Yamaguchi of Japan wins the women's singles final.

 ★ Player-athletes from Lord Trichy Spiral Martial Arts won the state level Silamba competition.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Post a Comment

Previous Post Next Post