தமிழக பட்ஜெட் 2022 - கல்வித்துறை அறிவுப்புகள் ( Current Update...)


 

* தமிழக பட்ஜெட்டில்பள்ளி கல்வித்துறைக்கு 36 ஆயிரத்து 736  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* இல்லம் தேடிக் கல்விக்கு 200 கோடி ஒதுக்கீடு.


* முன்மாதிரி பள்ளிகள் தொடங்க 120 கோடி ஒதுக்கீடு.


* புதிய திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்; பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.


* அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 


* அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ₹1000 வழங்கப்படும். 


* இலக்கிய திருவிழாக்கள் நடத்த 5.6 கோடி ஒதுக்கீடு.

Post a Comment

Previous Post Next Post