பிளஸ் 1 மாணவர் பட்டியல் திருத்தம் செய்ய அவகாசம்

பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில் திருத்தம் செய்ய, அரசு தேர்வுத் துறை அவகாசம் அளித்துள்ளது.தேர்வு துறை அறிக்கை:
பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதும் மாணவர் விபரங்கள் அடங்கிய பட்டியலை, அரசு தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பயனாளர் அடையாள எண்ணை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்யலாம்.அதில் பிழைகள் இருந்தால், வரும் 19ம் தேதி முதல், 23ம் தேதிக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு தேர்வு எழுதிய பின், அரசிதழில் பதிவு செய்து, பெயர் மாற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டும், அரசிதழில் உள்ளவாறு மாற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், சேர்ப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்களின் பயிற்று மொழியில் திருத்தங்கள் இருந்தால், dgef4sec@gmail.com என்ற'இ- - மெயில்' முகவரிக்கு, வரும் 24ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
dge.tn.gov.in
DGE.TN.GOV.IN
dge.tn.gov.in

Post a Comment

Previous Post Next Post