PGTRB தேர்வுக்கு கட்டுப்பாடுகள்; தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவர கூடாது.! பிப்.20 வரை நடக்கிறது
முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை தொடங்கி நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு குமரி மாவட்டத்தில் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை (19ம் தேதி தவிர்த்து) மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1க்கான தேர்வுகள் இணைய வழியாக கணினிகள் மூலம் நடைபெற உள்ளது. இந்ததேர்வு காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படவுள்ளது.
தேர்வுகள் காலை 9 மணி பிற்பகல் 2 மணி என இரு வேளைகளில் நடைபெறவுள்ளதால் காலை வேளையில் தேர்வெழுதும் தேர்வர்கள் 7.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்தில் ஆஜராகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன். போட்டோ மற்றும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்சு, பான்கார்டு, பாஸ்போர்ட் கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை இணையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக் கூடாது.
மேலும் தேர்வுக் கூடத்திற்குள் செல்போன், மைக்ரோ போன், கால்குலேட்டர், லாக் டேபிள், பேஜர், டிஜிட்டல் டைரி, புத்தகம் போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வு மையங்களிலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதி ஏற்பாடு செய்யவும், தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், போதுமான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரவும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது. மேலும், தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் எவ்வித முறைகேடு ஏற்படா வண்ணம் மேற்படி தேர்வுகளை கண்காணிக்கும் பொருட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

أحدث أقدم