தமிழகத்தில் பிப்ரவரி 27ம் தேதி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருக்கும் ஊரக திறனாய்வுத் தேர்வுகான மாணவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திறனாய்வுத் தேர்வு
தமிழகத்தில் மாநில அரசு சார்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் பட்டியலினத்தவர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சார்த்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இத்தேர்வு 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வை எழுத மாணவர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதன்படி கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு பயில கூடிய மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கேற்க முடியும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தாண்டு ஊரக திறனாய்வு தேர்வு பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவிருந்தது. அன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருப்பதால் 27ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரக திறனாய்வுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ம் தேதி முதல் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கூட அனுமதி சீட்டினை பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி உரிய அறிவுறுத்தல்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதாக என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post