மத்திய அரசுத் துறைகளில் 5000 பணியிடங்கள்: SSC அறிவிப்பு




மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள், நீதி மன்றங்கள் போன்றவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிப்பு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என 5 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள எஸ்எஸ்சி, ‘ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு 2021’ குறித்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




பணியாளர் தேர்வாணையம்: Staff Selection Commission




தேர்வு: ‘Combined Higher Secondary (10+2) Level Examination 2021’




காலியிடங்கள்: 5000+




பணி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)




சம்பளம்: 19,900-63,200)




பணி: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)




சம்பளம்: 25,500-81,100




தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.




பணி: Data Entry Operator (DEO)




சம்பளம்: 29,200-92,300




பணி: Data Entry Operator, Grade ‘A’




சம்பளம்: 25,500-81,100




தகுதி: அறிவியல், கணிதம் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.




வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.




ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 07.03.2022.




ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.03.2022.




மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

أحدث أقدم