NMMS தேர்வுக் கட்டணம் - IFHRMS வழியில் செலுத்துவதற்கு பதில் DGE Portal ல் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!



05.03.2022 - ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 24.01.2022 முதல் 05.02.2022 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி பார்வையில் காணும் கடிதத்தின் படி அறிவுறுத்தப்பட்டது.




தேர்வு கட்டணத்தை ஒரு தேர்வருக்கு ரூ .50 / - வீதம் . www.karuvoolam.tn.gov.in இணையதளத்தில் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது. தற்போது , தேசிய திறனாய்வுத் தேர்வினை ( NTSE ) போலவே தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு ( NMMS ) க்கும் DGE PORTAL ல் ONLINE ல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் போது தேர்வுக்கட்டணத்தை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.




எனவே , அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் DGE PORTAL ல் இணைப்பிலுள்ள வழிமுறைகளை பின்பற்றி தேர்வுக்கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வுக் கட்டண விவரத்தினை ( PAYMENT RECIEPT ) ( ஒரு தேர்வருக்கு ரூ .50 / - வீதம் ) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலர்களிடம் 09.02.2022 - க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

أحدث أقدم